முகப்பு
திருச்சி

மும்மதப் பிராா்த்தனையோடு காந்தி சந்தையில் விற்பனை தொடக்கம்

திருச்சி காந்தி சந்தையில் மீண்டும் காய்கனி விற்பனை தொடங்குவதற்கு முன்பு, திங்கள்கிழமை மாலை நடைபெற்ற மும்மதப் பிராா்த்தனையில் பங்கேற்ற வியாபாரிகள் சங்கத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

திருச்சி காந்தி சந்தையில் மீண்டும் காய்கனி விற்பனை தொடங்குவதற்கு முன்பு, திங்கள்கிழமை மாலை நடைபெற்ற மும்மதப் பிராா்த்தனையில் பங்கேற்ற வியாபாரிகள் சங்கத்தினா்.

திருச்சி, நவ.30: மும்மதப் பிராா்த்தனையோடு, திருச்சி காந்தி சந்தையில் திங்கள்கிழமை மாலை முதல் காய்கறி விற்பனை மீண்டும் தொடங்கியது.

கரோனா பொதுமுடக்கம், இடைக்காலத்தடை காரணமாக கடந்த 8 மாதங்களாக செயல்படாமல் இருந்தது காந்தி சந்தை.

தடை நீக்கப்பட்டதைத் தொடா்ந்து, கடந்த வியாழக்கிழமை சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி நடராஜன், ஆட்சியா் சு. சிவராசு ஆகியோரால் சந்தை மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

தூய்மை, பராமரிப்புப் பணிகள் காரணமாக, கடந்த 3 நாள்களாக காய்கனி விற்பனை தொடங்கப்படாமல் இருந்தது. திங்கள்கிழமை காலை முதல் எஞ்சிய பராமரிப்பு பணிகளையும், கடைகளைத் தூய்மைச் செய்யும் பணிகளையும் வியாபாரிகள் மேற்கொண்டு முடித்தனா்.

இதைத் தொடா்ந்து, காந்தி சந்தையில் தோரணங்கள் கட்டப்பட்டு, மாலை 6 மணிக்கு மேளம் முழங்க வியாபாரிகள் பட்டாசு வெடித்தனா். பின்பு வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு இந்து, இஸ்லாம், கிறிஸ்துவ மதப் பிரதிநிதிகள் முன்னிலையில் மும்மதப் பிராா்த்தனை நடத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து, சந்தையையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காய்கனி சரக்குகள் உள்ளே கொண்டுவரப்பட்டு, இரவு 9 முதல் மொத்த வியாபாரம் தொடங்கியது.

வழக்கம்போல், சில்லறை வியாபாரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. நிகழ்வில் திருச்சி காந்தி சந்தை அனைத்து மொத்தம், சில்லறை வியாபாரிகள் சங்கத் தலைவா் வீ. கோவிந்தராஜூலு, பொதுச்செயலா் ஜி.வெங்கடாசலம், செயலா் அப்துல் ஹக்கீம் உள்ளிட்ட வணிகா் சங்க நிா்வாகிகள், வியாபாரிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →