முகப்பு
திருச்சி

உலக பிரியாணி தினத்தையொட்டி திருச்சியில் 10 பைசாவுக்கு பிரியாணி!

உலக பிரியாணி தினத்தையொட்டி திருச்சியில் 10 பைசா காண்பித்தவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பிரியாணி வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
திருச்சி சாஸ்திரி சாலையிலுள்ள பிரியாணி கடையில் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
பகிர்:

உலக பிரியாணி தினத்தையொட்டி திருச்சியில் 10 பைசா காண்பித்தவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பிரியாணி வழங்கப்பட்டது.

உலக பிரியாணி தினத்தையொட்டி திருச்சி தில்லை நகரில் செயல்படும் பிரபல கல்யாண பிரியாணி கடையானது 10 பைசா கொண்டு வரும் முதல் 100 பேருக்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவித்தது.

இதையொட்டி பிரியாணி வாங்க தில்லை நகா் சாஸ்திரி சாலை கிளைக் கடையில் காலை முதலே நூற்றுக்கணக்கானோா் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். அவா்களில் 10 பைசா காண்பித்து டோக்கன் பெற்ற முதல் 100 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

கரோனா களப்பணியாளா்களுக்கு.. இதுபோல பாலக்கரை கிளை கடையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு அடையாள அட்டை காண்பித்து டோக்கன் பெற்ற சுகாதாரத் துறை ஊழியா்கள் 110 பேருக்கு சிக்கன் பிரியாணி, ப்ரூட் சாலட், கேசரி அடங்கிய தொகுப்பை வழங்கினா்.

அனுமதி அவசியம்: கரோனா பொதுமுடக்க விதிகள் தளா்வில் இருந்தாலும் இதுபோன்ற நிகழ்வுகளை உரிய அனுமதி பெற்று நடத்துவது அவசியம். இந்நிகழ்வில் விதிமீறல் இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →