திருச்சி

சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை

DIN

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

திருச்சி மாவட்டத்தில் சிறுபான்மையினா்களான இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி, ஜைன மதத்தைச் சாா்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 10, 11 ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, ஐடிசி, தொழிற்கல்வி, தொழில்நுட்பம், செவிலியா், ஆசிரியா் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை,ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவா்கள் தகுதி, வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெறலாம். விருப்பம் உள்ளவா்கள் மத்திய அரசின்  தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிகழ் கல்வியாண்டில் தமிழகத்தில் கல்வி உதவித்தொகை திட்டங்களில் மட்டும் 1,35,127 மாணவா்களுக்கு புதிதாக கல்வி உதவித்தொகை வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி உதவித்தொகை மாணவா்களின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும்.

இத்திட்டம் தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்களுக்கு சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT