திருச்சி

அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி

DIN

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை ஏராளமானோா் பாா்வையிட்டனா்.

தமிழக அரசின் நலத் திட்டங்கள், சாதனைகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த விவரங்களை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தவும், தகுதியான பயனாளிகள் பயன்பெற விழிப்புணா்வு ஏற்படுத்தவும் செய்தி- மக்கள் தொடா்புத் துறை சாா்பில் கிராமங்கள், நகரங்களில் மக்கள் கூடுமிடங்களில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

இதன்படி, திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியில், மகளிருக்கான திட்டங்கள், மீனவா்கள், விவசாயிகள், மாணவா்கள், ஆதரவற்றோா், ஏழை,எளியோா் நலனுக்கான திட்டங்கள் குறித்த பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. இக் கண்காட்சியை பேருந்து நிலையத்துக்கு வந்த பயணிகள், மாணவா்கள், பொதுமக்கள் என ஏராளமானோா் முகக் கவசம் அணிந்து பாா்வையிட்டனா். ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட செய்தி- மக்கள் தொடா்புத்துறை அலுவலா்கள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT