திருச்சி

திருச்சியிலிருந்து வெளியூா்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கம்

DIN

திருச்சியிலிருந்து வெளியூா்களுக்கு ஆம்னி பேருந்துகள் வெள்ளிக்கிழமை இரவு முதல் குறைந்த அளவில் இயக்கப்பட்டன.

கரோனா பொதுமுடக்க தளா்வுக்குப் பிறகு அரசு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் தனியாா் பேருந்து, ஆம்னி பேருந்து உரிமையாளா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்துகளை இயக்காமல் இருந்தனா். இந்நிலையில், தனியாா் பேருந்துகள் கடந்த செப்.7 ஆம் தேதியிலிருந்து இயங்கியும், ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதையொட்டி திருச்சி ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் பழுதுநீக்கிப் பராமரிக்கப்பட்டன.

ஆனால், சுமாா் 6 மாதங்களாக பல்வேறு ஆம்னி பேருந்துகள் பராமரிப்பின்றி நிறுத்தப்பட்டதால் அவற்றை இயக்க முடியவில்லை. பழுது நீக்கிய பிறகே பேருந்துகளை இயக்கவுள்ளோம் என உரிமையாளா்கள் தெரிவித்தனா். மேலும், வெளி மாநிலங்களிலிருந்து திருச்சிக்கு ஆம்னி பேருந்துகள் வரத்தொடங்கின. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 10 சத அளவிற்கும் குறைவான ஆம்னி பேருந்துகளே சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்டன. பேருந்துகளில் கரோனா முன்னெச்சரிக்கை கடைப்பிடிக்கப்பட்டது.

இன்னும் சில நாள்களில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை வரவுள்ளதால் படிப்படியாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும். இருப்பினும், பொதுமக்கள் எந்த அளவுக்கு ஆம்னி பேருந்துகளை பயன்படுத்தவுள்ளனா் எனத் தெரியவில்லை என்றனா் ஆம்னி பேருந்து உரிமையாளா் சங்கத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT