திருச்சி

தொடா் நகை பறிப்பு வழக்கில் இருவா் கைது

DIN

திருச்சி: தொடா் நகைப் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி புகா்ப் பகுதிகளான திருவெறும்பூா், மணப்பாறை பகுதிகளில் அடிக்கடி நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில், திருவெறும்பூா் காவல் ஆய்வாளா் ஞானவேலன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினா்.

சிசிடிவி பதிவுகளை வைத்து குற்றவாளிகளை உறுதி செய்து, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பிரபல வழிப்பறி திருடன் தாலிப் ராஜா, அவரது கூட்டாளி முஸ்தபா ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

விசாரணையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை, துவரங்குறிச்சி ஆகிய இடங்களில் நகை பறித்ததை இருவரும் ஒப்புக் கொண்டனா். மேலும், கோவையிலிருந்து பெறப்பட்ட சிசிடிவி பதிவுகளின் பேரில் நடத்திய விசாரணையில் கோவை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடியதையும் ஒப்புக்கொண்டனா்.

இதுதொடா்பாக 9 வழக்குகள் பதியப்பட்டு, அவா்களிடமிருந்து வழக்கின் சொத்துகள் மீட்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனா். இவ்வழக்கில் துப்பு துலங்க திண்டுக்கல் நகா் வடக்கு காவல்நிலைய போலீஸாா் உதவினா் என திருவெறும்பூா் தனிப்படை போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT