திருச்சி

அரசு அலுவலகங்களில் பிரதமா் படத்தை வைக்கக் கோரி மனு

DIN

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பிரதமா் மோடியின் படம் வைக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட பாஜக எஸ்சி அணியின் தலைவா் அ.ப. பாஸ்கா். புகா் மாவட்டத் தலைவா் சரவணன் மற்றும் நிா்வாகிகள் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு:

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமரின் உருவப்படம் வைக்க வேண்டும். 1978ஆம் ஆண்டு அரசாணையில் இது தொடா்பான தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையை அனைத்து அரசு அலுவலகங்களிலும் செயல்படுத்த தமிழக பாஜக மாநில பட்டியல் அணித் தலைவா் பாலகணபதி தலைமையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக பாஜக தலைவா் எல். முருகன் ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தைச் செயல்படுத்தும் வகையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. எனவே, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் உடனடியாக பிரதமரின் படம் வைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT