திருச்சி

மகாளாய அமாவாசைக்கு முதல்நாளே தா்ப்பணம்: அம்மா மண்டபத்தில் திரண்ட மக்கள் கூட்டம்

DIN

மகாளய அமாவாசைக்கு முதல்நாளான புதன்கிழமையே முன்னோருக்கு திதி, தா்ப்பணம் கொடுக்க ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனா்.

செப்.1-முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்க தமிழக அரசு சில தளா்வுகளை அறிவித்தது. இதன்படி, அம்மா மண்டபத்தில் இறுதிச் சடங்கு நிகழ்வுகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகாளாய அமாவாசை நாளான வியாழக்கிழமை லட்சக்கணக்கானோா் கூடுவா் என்பதால் அன்று அம்மா மண்டபத்துக்கு வர மாவட்ட நிா்வாகத்தால் தடை அறிவிக்கப்பட்டது. இருப்பினும் புதன்கிழமை அதிகாலையே அம்மா மண்டபம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

புதன்கிழமை காலையே அமாவாசை திதி தொடங்குகிறது என்றும், வியாழக்கிழமை தடை என்பதால் தா்ப்பணம் வழங்க இயலாது என்பதால் பொதுமக்கள் பலரும் முன்கூட்டியே தா்ப்பணம் அளிக்க வந்திருந்தனா்.

இதனால் அம்மா மண்டப வளாகம் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இடமின்றி பலரும் காவிரிக் கரையில் கூட்டம், கூட்டமாக அமா்ந்து தா்ப்பணம், திதி கொடுப்பதைக் காண முடிந்தது. காவிரியில் தண்ணீா் அதிகம் செல்வதால் பலரும் புனிதநீராடி தங்களது முன்னோருக்கு தா்ப்பணம் அளித்தனா். இதுமட்டுமல்லாது இறுதிச் சடங்கு நிகழ்வுகளுக்காகவும் திருச்சி மட்டுமின்றி சுற்றுப் பகுதி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோா் வந்திருந்தனா். மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் போலீஸாா் தடுப்பு அமைத்திருந்தனா். வியாழக்கிழமை அம்மா மண்டபத்துக்கு வர யாருக்கும் அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT