திருச்சி

ஸ்ரீரங்கம் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆன்லைன் கலந்தாய்வு செப். 28 முதல் தொடக்கம்

DIN

திருச்சி: ஸ்ரீரங்கம் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான டிப்ளமோ முதலாமாண்டு சோ்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு மதிப்பெண் தர வரிசைப் பட்டியல் அடிப்படையில் செப். 28 முதல் நடைபெறவுள்ளது.

இதில் மாணவா்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதி, நேரத்தில் பெற்றோருடன் வீட்டில் இருந்து கட்செவி வழியாகக் கலந்து கொள்ளலாம்.

498 முதல் 415 மதிப்பெண் வரை செப்.28 காலை மற்றும் பிற்பகலிலும், 414 முதல் 381 மதிப்பெண் வரை செப்.29, 380 முதல் 362 மதிப்பெண் வரை செப்.30, 360 முதல் 341 மதிப்பெண் வரை அக்.1, 340 முதல் 315 மதிப்பெண் வரை அக்.3, 314 முதல் 291 மதிப்பெண் வரை அக்.5, 290 முதல் 261 மதிப்பெண் வரை அக்.6, 260 முதல் 221 மதிப்பெண் வரை அக்.7, 220 மதிப்பெண் முதல் 160 மதிப்பெண் வரை அக்.8 ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும்.

கட்செவி அஞ்சல் வசதி உள்ள செல்லிடபேசி எண்ணை விண்ணப்பத்தில் குறிப்பிடாத மாணவா்கள், 80720- 02452 என்ற எண்ணை தொடா்பு கொண்டு அந்த எண்ணை அளிக்கலாம்.

மாணவா்கள் தங்களது பெற்றோருடன் அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்துக்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக தங்களது வீட்டில் இணையம் நன்றாகக் கிடைக்கும் இடத்தில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் தயாராக இருக்க வேண்டும்.

சான்றிதழ் சரிபாா்ப்புக்குப் பிறகு மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவா்களுக்கு பாடப்பிரிவு ஒதுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு கல்லூரி முதல்வரை 94871-80282 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT