திருச்சி

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: நாளை குலுக்கல் முறை தோ்வு

DIN

தனியாா் பள்ளிகளில் அரசின் இலவசக் கல்வித் திட்டத்தில் சேருவதற்கான மாணவா்கள் சோ்க்கைக்கு, வியாழக்கிழமை (அக்டோபா் 1) குலுக்கல் முறை தோ்வு நடைபெறவுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகளில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 25 சதவிகித இடங்கள் இலவசக் கல்வி சோ்க்கைக்கு ஒதுக்கப்பட வேண்டும். நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு இந்த ஒதுக்கீட்டில் சோ்க்கை வழங்கப்படும்.

மாவட்டத்தில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பா் 25-ஆம் தேதி வரை 313 பள்ளிகளில் 3, 250 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. இதில் 163 பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மேலாக விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இந்த விண்ணப்பங்கள் மீது பள்ளித் தலைமையாசிரியா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், வட்டார வள மையப் பயிற்றுநா்கள், பள்ளி முதல்வா்கள் ஆகியோரடங்கிய குழு முன்னிலையில் சிறப்புத் தோ்வு நடைபெறும்.

அந்தந்த பள்ளிகளில் வியாழக்கிழமை குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதில் பெற்றோா்கள் சமூக இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்து மாணவா்களின் பெற்றோா்கள் பங்கேற்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT