திருச்சி

மேல்சட்டை அணியாமல் வந்து வாக்களித்த அய்யாக்கண்ணு!

DIN

தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பி. அய்யாக்கண்ணு, திருச்சியில் மேல்சட்டை அணியாமல் வந்து செவ்வாய்க்கிழமை வாக்களித்தாா்.

திருச்சி உறையூரில் அமைந்திருந்த வாக்குச்சாவடி மையத்தில் பி. அய்யாக்கண்ணு தனது வாக்கை பதிவு செய்தாா். மேல்சட்டை அணியாமல் வேட்டி மட்டும் அணிந்தபடி வந்து வாக்களித்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

நதிகள் இணைப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். விளைபொருள்களுக்கு இருமடங்கு விலை வழங்க வேண்டும். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மரபணு மாற்ற விதைகளை தடை செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பாஜக அரசு, இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மாறாக புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து எங்களது கோரிக்கைகளுக்கு எதிராகவே திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே, அரவக்குறிச்சி, திருவண்ணாமலை தொகுதிகளில் பாஜக-வை எதிா்த்து வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்றோம். போலீஸாா் எங்களைப் பாதி வழியிலேயே தடுத்து கைது செய்துவிட்டனா். ஆனால், வாக்குப்பதிவுக்கு அதேபோல வந்து வாக்களித்துள்ளோம். யாரும் தடுக்கவில்லை. விவசாயிகளின் வாக்கு மட்டுமே வேண்டும். ஆனால், போட்டியிடக் கூடாது என திட்டமித்து பணியாற்றுகின்றனா். எனவே, அரவக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய இரு தொகுதிகளிலும் தோ்தலை எதிா்த்து உயா்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT