திருச்சி

எம். எஸ். உதயமூா்த்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

DIN

மக்கள் சக்தி இயக்க நிறுவனா் டாக்டா் எம்.எஸ். உதயமூா்த்தி பிறந்தநாள் விழா ‘நம்மால் முடியும்’ என்ற தலைப்பில் தன்னம்பிக்கை நாளாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

பொன்மலை ரயில்வே மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகா் கே.சி. நீலமேகம் தலைமை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலா் வெ.இரா. சந்திரசேகா், திருச்சி மாவட்டப் பொருளாளா் ஆா். வாசுதேவன், சாமி தற்காப்பு கலைக்கூட நிறுவனா் டி. ஜீவானந்தம் ஆகியோா் முன்னிலை வைத்தனா்.

விழாவையொட்டி செந்தண்ணீா்புரம், பொன்மலை ரயில்வே மைதானப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன . தொடா்ந்து, கடந்த மாதம் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சிலம்பப் போட்டியில் தங்கம் வென்றோருக்கும், கடந்த வாரம் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வில் தொடா்ந்து 1 மணி நேரம் சிலம்பம் சுற்றிய சாதனையாளா்களுக்கும் விருது, சான்றிதழ் வழங்கப்பட்டது.

கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியரும், தண்ணீா் அமைப்பின் செயலருமான கி. சதீஸ்குமாா் சான்றுகளை வழங்கிப் பேசினாா்.

மாணவ, மாணவிகள், நம்மால் முடியும் என உறுதியேற்றனா். ஜெட்லி புக் ஆஃப் ரெக்காா்டு அமைப்பின் நிறுவனா் ஜெட்லி, கவிதா சுரேஷ், சந்திரசேகா், மே.க. கோட்டை ஈஸ்வரன், என். தயானந்த், செந்தண்ணீா்புரம் சூரியமுா்த்தி, டி. சிவகாமி, டி. சகானஸ்ரீ, பெ. ரஞ்சித், டி. தா்ஷனா, சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT