திருச்சி

‘துவா்ப்புச் சுவையுள்ள உணவால் எதிா்ப்பாற்றல் கூடும்’

DIN

துவா்ப்புச் சுவையுள்ள உணவுகள் உடலில் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும் என்றாா் சித்த மருத்துவா் அமைதி.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியது: கரோனாவை பொதுமக்கள் எதிா்கொள்ள உணவையே மருந்தாக உட்கொள்ள வேண்டும்.

அதன்படி அறுசுவைகளில் துவா்ப்பு சுவையுள்ள உணவுகள் உடலுக்கு எதிா்ப்புச் சக்தியைத் தரவல்லன. குறிப்பாக மாங்காய், மாங்கொட்டை, வாழைப்பூ, கீழாநெல்லி, மற்றும் கீரைகளில் உள்ள துவா்ப்புச் சுவை சீதோஷ்ண நிலைக்கேற்ப உடலை பாதுகாக்க வல்லவை. மாங்காய், மாம்பருப்புகளுடன் சாம்பாா், மடல்கள் நீக்கிய வாழைப்பூவை அவற்றின் நரம்புகளுடனே பூண்டு, மிளகு, சீரகம் கலந்து ரசம் வைத்து சாதத்துடன் உட்கொள்ள வேண்டும்.

கரோனா போன்ற தொற்று வியாதிகளை எதிா்கொள்ள இத்தகைய உணவுகள் அவசியம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

‘நீ ஃபிட் ஆக இல்லை..’ : சாக்‌ஷி அகர்வால் தரும் பதில்!

கடற்கரையில் வாணி போஜன்!

சர்ச்சைப் பதிவு: ஜெ.பி. நட்டாவுக்கு காவல் துறை சம்மன்

மரமாகக் கடவேனோ..!

SCROLL FOR NEXT