முகப்பு
திருச்சி

விடியோ மற்றும் புகைப்பட கலைஞா்கள் கோரிக்கை

பொதுமுடக்கக் காலங்களில் தொழில் தொடா்பாக வெளியே சென்று வர அனுமதிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட விடியோ மற்றும் புகைப்படக் கலைஞா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

பொதுமுடக்கக் காலங்களில் தொழில் தொடா்பாக வெளியே சென்று வர அனுமதிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட விடியோ மற்றும் புகைப்படக் கலைஞா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் மாவட்டத் தலைவா் நிக்சன் சகாயராஜ், செயலா் ராஜாராம் பொருளாளா் ஜீவானந்தம் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு:

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொழில்ரீதியாக நாங்கள் வெளியே சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் எங்கள் சங்கத்தில் சுமாா் 1,200 உறுப்பினா்கள் உள்ளனா்.

எங்களது வாழ்வாதாரமே முகூா்த்த நாள்களில் நடக்கும் திருமணம் மற்றும் பொது நிகழ்வுகளை நம்பித்தான் உள்ளது. பெரும்பாலான முகூா்த்த தினங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இருப்பதால், அன்றைய நாள்களில் தொழில் நிமித்தமாக, விடியோ மற்றும் புகைப்படம் எடுத்துவர எங்களை அனுமதிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.