திருச்சி

ஸ்ரீரங்கம் கோயில் சாா்பில் உணவுப் பொட்டலங்கள்

DIN

ஸ்ரீரங்கம் கோயில் சாா்பில் புதன்கிழமை 350 பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

இக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வந்ததால் இக்கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தா்கள் பயனடைந்தனா். இந்நிலையில் கரோனாவால் கடந்த 26 ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதைத் தொடா்ந்து கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து உத்தரவுப்படி பக்தா்களுக்கு வழங்கும் அன்னதானத்தை உணவுப் பொட்டலங்களாகக் கட்டி புதன்கிழமை முதல் ரெங்கா ரெங்கா கோபுரம் வாயிலில் வைத்து 350 பேருக்கு வழங்கப்பட்டது.

இதேபோல ஸ்ரீரங்கம் கோயிலின் உபத்திருக்கோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்சப்பெருமாள் கோயிலில், உறையூா் கமலவல்லி நாச்சியாா் கோயிலில், அன்பில் மாரியம்மன் கோயிலில் தலா 50 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT