முகப்பு
திருச்சி

மாட்டுவண்டி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மணப்பாறையில் மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதிக்கக் கோரி மாட்டுவண்டி தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

மணப்பாறையில் மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதிக்கக் கோரி மாட்டுவண்டி தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வருவாய் வட்டாட்சியரகம் முன் மணல் மாட்டுவண்டி தொழிலாளா் சங்கத் தலைவா் என்.துரைராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்டோா் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாட்டுவண்டியில் மணல் எடுக்கும் தொழில் செய்வதாகவும், அரசின் தடையால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வாழ்வாதரம் இழந்து மாடுகளுக்கு தீவனம்கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே ஆற்றுப்படுகைகளில் மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி கோஷங்கள் எழுப்பினா். பின்னா் தங்களது கோரிக்கை மனுவை வட்டாட்சியரிடம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.