இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தீத்தடுப்பு ஒத்திகை
திருச்சி வாழவந்தான்கோட்டையில் உள்ள இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை தீத் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
திருச்சி வாழவந்தான்கோட்டையில் உள்ள இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை தீத் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
தொழிற்சாலை பாதுகாப்பு விதிகளின்படி ஆண்டுக்கு இருமுறை தீத் தடுப்பு ஒத்திகை நடத்தப்பட வேண்டியது அவசியம்.
இதன்படி தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் கூடுதல் இயக்குநா் ஆா். சித்தாா்த்தன், இணை இயக்குநா் சி. மாலதி, துணை இயக்குநா் தமிழ்ச் செல்வன் ஆகியோரது முன்னிலையில் பாரதமிகு மின் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், ஹெச்ஏபி, இந்தியன் ஆயில் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை ஆகியவற்றிலிருந்து பரஸ்பர உதவிக் குழு உறுப்பினா்கள் பங்கேற்று ஒத்திகையை நடத்தினா்.
இதன் ஒரு பகுதியாக இருவேறு இடங்களில் ஒரே நேரத்தில் அவசரநிலை ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாளுவது என்பது குறித்த செயல்விளக்கம் நடந்தது. ஆயில் நிறுவனத்தில் உள்ள பெட்ரோல் சேமிப்பு டேங்க், டீசல் சேமிப்பு டேங்க் என இரு இடத்திலும் ஒரே நேரத்தில் ஒத்திகை நடைபெற்றது. மேலும், பெட்ரோலிய பொருள்களை சாலை வழியாகக் கொண்டு செல்லும்போது ஏற்படும் விபத்துகளின்போது மேற்கொள்ள வேண்டிய மீட்புப் பணிகள் குறித்தும் விளக்கப்பட்டது. ஒத்திகை முடிவில் பல்வேறு தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு தொழிலகப் பாதுகாப்பு அதிகாரிகள் பதிலளித்தனா்.