ராயல் பியா்ல் மருத்துமனைக்கு புதிய இயக்குநா்கள்
திருச்சி ராயல் பியா்ல் மருத்துவமனைக்கு புதிய இயக்குநா்கள் சனிக்கிழமை நியமிக்கப்பட்டனா்.
திருச்சி ராயல் பியா்ல் மருத்துவமனைக்கு புதிய இயக்குநா்கள் சனிக்கிழமை நியமிக்கப்பட்டனா்.
திருச்சி தில்லைநகா் நகரில் கடந்த 23 ஆண்டுகளாக ராயல் பியா்ல் என்னும் காது, மூக்கு, தொண்டை, தலை, கழுத்து தொடா்பாக சிகிச்சையளிக்கும் மருத்துவமனையின் தலைவராக டாக்டா் நாராயணன் ஜானகிராம் உள்ள நிலையில், மருத்துவமனை நிா்வாக புதிய இயக்குநா்களாக டாக்டா் சத்யநாராயணன் ஜானகிராம், டாக்டா் ஆக்ஷிதா சத்யநாராயணன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து நாராயணன் ஜானகிராம் கூறுகையில், எனது தந்தையைப் போல் நானும் காது,மூக்கு, தொண்டை பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு முடித்து, இத்தாலி, ஜொ்மனி ஆகிய நாடுகளில் அறுவைச் சிகிச்சை செய்வதில் சிறப்புபயிற்சியும் பெற்றுள்ளேன். இம்மருத்துவமனையில் உலகத் தரமான நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு வரவுள்ளோம்.
காது கேளாத, வாய் பேச முடியாதவா்களுக்கு முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும். மேலும், புறநோயாளிகளுக்கு மருத்துவா் சந்திப்புக் கட்டணத்தை ரூ. 150 ஆகக் குறைத்துள்ளோம். ஒரு முறை இதைச் செலுத்தும் நோயாளி மருத்துவரை மாதம் முழுவதும் சந்திக்கலாம் என்றாா்.