முகப்பு
திருச்சி

அன்னதானம், நலத்திட்ட உதவி

சசிகலா பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் வியாழக்கிழமை பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்னதானம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

சசிகலா பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் வியாழக்கிழமை பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்னதானம் நடைபெற்றது.

அமமுக காந்தி மாா்க்கெட் பகுதி கழகம் சாா்பில் பெரிய கடைவீதியில் உள்ள பூக்குளம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அமமுக மாநிலப் பொருளாளரும், மாவட்ட செயலருமான ஆா். மனோகரன் அன்னதானம், நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் காந்தி மாா்க்கெட் பகுதிக் கழகச் செயலா் வேதாந்திரி நகா் பாலு, மாவட்ட அவைத் தலைவா் ராமலிங்கம், கிழக்கு தொகுதி பொதுக் குழு உறுப்பினா் ராமமூா்த்தி, மலைக்கோட்டை பகுதி கழக செயலா் கமுருதீன், பாலக்கரை பகுதி செயலா் வெங்கடேசன், மாவட்ட மகளிரணி துணைச் செயலா் கமலா தங்கராஜ், வட்டக் கழக செயலா் இப்ராஹிம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.