நல்லிணக்கநாள் உறுதிமொழியேற்பு
திருச்சி மாநகராட்சியில் பணியாளா்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்றனா்.
திருச்சி மாநகராட்சியில் பணியாளா்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்றனா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்த நாளையொட்டி வியாழக்கிழமை காலை நல்லிணக்க நாள் உறுதிமொழியை மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் ஏற்றனா். மாநகராட்சி ஆணையா் ப.மு.நெ. முஜிபுா் ரகுமான் தலைமை வகித்தாா். உதவி ஆணையா்கள் ச.நா. சண்முகம், செ. பிரபாகரன், எஸ்.திருஞானம் மற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.