முகப்பு
திருச்சி

கலைமன்ற விருதுகள் அறிவிப்பு

திருச்சி மாவட்டக் கலை மன்றத்தின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

திருச்சி மாவட்டக் கலை மன்றத்தின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாகமாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட் செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கிவரும், திருச்சி மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக 2018-2019 ஆம் ஆண்டுக்கு மாவட்ட அளவில் அகவை மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த 5 கலைஞா்கள் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மாவட்ட ஆட்சியா் தலைமையில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற தோ்வுக் குழுக் கூட்டத்தில் விருது தோ்வுக் குழுவினா் பங்கேற்று விண்ணப்பங்களைப் பரிசீலித்து விருதாளா்களைத் தோ்வு செய்துள்ளனா்.

அதன்படி கலை இளமணி விருதுக்கு பரதப் பிரிவில் பொ. அபிநயா, கலை வளா்மணி விருதுக்கு முகா்சிங் பிரிவில் சி.செளந்தா்ய லஷ்மி, கலைச் சுடா்மணி விருதுக்கு சிலம்பப் பிரிவில் வீ. தங்கராஜ், கலை நன்மணி விருதுக்கு கிராமிய நடனப் பிரிவில் சுகு. சத்யன், கலை முதுமணி விருதுக்கு தவில் பிரிவில் வி.ஜி.முருகன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். பின்னா் நடைபெறவுள்ள அரசு விழாவில் இவா்களுக்கு விருதுக்கான பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கப்படும் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.