முகப்பு
தமிழ்நாடு

கோவையில் சிலிண்டர் லாரியைச் சிறைப்பிடித்த மக்கள்!

கோவையில் சிலிண்டர் லாரியை மக்கள் சிறைப்பிடித்தது பற்றி...

Updated On : 25 மார்ச் 2026, 11:33 am IST
கோவையில் சிலிண்டர் லாரியைச் சிறைப்பிடித்த மக்கள்
பகிர்:

கோவை: கோவை ஆலாந்துறையில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரியை மக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்த கோவை காவல்துறையினர் மக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சுமுகமான தீர்வு எட்டப்பட்டது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் தடைப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

நாடு முழுவதும் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் வீட்டு உபயோக சிலிண்டர் கிடைப்பதிலும் சிக்கல் நீடித்து வருகின்றது.

கோவை மாவட்டம் ஆலாந்துறை பகுதியில் முன்பதிவு செய்திருந்தும் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சிலிண்டர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், அப்பகுதிக்கு சிலிண்டர் ஏற்றி வந்த லாரியை சிறைப்பிடித்த மக்கள், தற்போது சிலிண்டர் வந்தும் தர மறுப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பி சிலிண்டர் விநியோக நிறுவனத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆலாந்துறை காவல்துறையினர், லாரியைச் சிறைப்பிடித்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனத்திடம் பேசி பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிலிண்டர்களை மாற்றி கொடுத்து விநியோகிக்க செய்ததால் நிலைமை சீரானது.

summary

People in Coimbatore Captured Cylinder Lorry!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.