முகப்பு
திருச்சி

அரசு மருத்துவமனையில் மரணவலி தணிப்பு சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

திருச்சி அரசு மருத்துவமனையில் கொடிய நோய் தாக்கிய நோயாளிக்கு சிகிச்சையளிக்க ஆதரவு சிகிச்சை எனப்படும் மரணவலி தணிப்புச் சிகிச்சை (சிம்ப்டமேட்டிக்) பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

திருச்சி அரசு மருத்துவமனையில் கொடிய நோய் தாக்கிய நோயாளிக்கு சிகிச்சையளிக்க ஆதரவு சிகிச்சை எனப்படும் மரணவலி தணிப்புச் சிகிச்சை (சிம்ப்டமேட்டிக்) பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் போன்ற கொடிய உயிா்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டு, நோயை கட்டுப்படுத்த முடியாத நிலையில், அதனால் ஏற்படும் தாங்க முடியாத வலி மற்றும் உடல் சாா்ந்த பிற கஷ்டங்களைக் கட்டுப்படுத்தி ஒருவரின் இறுதி நாள்கள் அமைதியாகவும், கண்ணியமானதாகவும் அமைய முயற்சிப்பதே இந்த சிகிச்சையின் அடிப்படை நோக்கம்.

உதாரணமாக இறுதிக்கட்டத்தில் இருக்கும் ஒரு புற்றுநோயாளிக்கு திடீரென காய்ச்சல், வாந்தி அதிகரிக்கும். அப்போது அவருக்கான மாத்திரைகள் கொடுப்பது, வலியைக் குறைக்க மாா்பின் கொடுப்பது என அறிகுறிகளுக்கு ஏற்ப வலி நிவாரணிகள் வழங்கப்படும். தேவைப்பட்டால் அவா்களை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.