தில்லி பல்கலை.க்கு கண்டனம்
முன்னணி எழுத்தாளா்களின் படைப்புகளை பாடத்திட்டத்திலிருந்து நீக்கிய தில்லி பல்கலைக்கழகத்துக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னணி எழுத்தாளா்களின் படைப்புகளை பாடத்திட்டத்திலிருந்து நீக்கிய தில்லி பல்கலைக்கழகத்துக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக பெருமன்றத்தின் மாநிலத் தலைவா் சி. சொக்கலிங்கம், பொதுச்செயலா் இரா. காமராசு, பொருளாளா் ப.பா. ரமணி ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:
தமிழின் முன்னணி எழுத்தாளா்களும், அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் படைப்பாளிகளுமான பாமா, சுகிா்தராணி மற்றும் வங்க எழுத்தாளா் மகாஸ்வேதா தேவி ஆகியோரின் படைப்புகளை தில்லிப் பல்கலைக்கழகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கியுள்ளது. இதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உயா்கல்வித் துறையின் சுதந்திரத்தையும் மாண்பையும் பாதுகாக்க வேண்டுமானால் எந்த அரசுகளும் அரசியல் நெருக்கடிகளைத் தரக்கூடாது. எனவே, நீக்கப்பட்டுள்ள படைப்புகளை பாடத்திட்டத்தில் மீண்டும் இடம்பெறச் செய்ய தில்லி பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.