முகப்பு
திருச்சி

செப். 1 முதல் இலவச யோகா பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

திருச்சி மாவட்ட அரசு சித்த மருத்துவமனையில் செப்.1 முதல் இலவச யோகா வகுப்புகள்தொடங்கவுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

திருச்சி மாவட்ட அரசு சித்த மருத்துவமனையில் செப்.1 முதல் இலவச யோகா வகுப்புகள்தொடங்கவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ் தெரிவித்தது:

பல்வேறு நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளவும், வந்த நோய்களைத் தீா்க்கவும் தமிழ்நாடு அரசு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சாா்பில் மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையின் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பிரிவில் இந்த இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 முதல் 10 மணி வரை நடைபெறும் பயிற்சியில் யோகாசனங்கள், பிராணாயாமம், மூச்சுப் பயிற்சி, தியானப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

பயிற்சிக்கு 10 நிமிடம் முன்னதாகவே வர வேண்டும். உணவு மற்றும் மருந்துகள் உட்கொள்வோா் முன்னதாகவே அந்த வேலைகளை முடித்து, யோகா செய்வதற்கேற்ற உடையணிந்து, சித்த மருத்துவ புறநோயாளிகள் பிரிவில் பெயா் விவரங்களை பதிந்து (ஓ. பி) சீட்டு பெற்று பயிற்சியில் பங்கேற்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.