ரியல் எஸ்டேட் பிரமுகா் கொலை: உறவினா்கள் தா்னா
திருச்சி அருகே நடந்த ரியல் எஸ்டேட் பிரமுகா் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அவரது உறவினா்கள் ஆட்சியரகத்தில் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி அருகே நடந்த ரியல் எஸ்டேட் பிரமுகா் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அவரது உறவினா்கள் ஆட்சியரகத்தில் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி சோமரசம்பேட்டை அருகேயுள்ள செங்கதிா்சோலையைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் பிரமுகா் சிவகுமாா்(50) கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டாா்.
இந்த வழக்கில் அதே பகுதியைச் சோ்ந்த பிரபாகரன், தீபக், அந்தநல்லூா் திமுக ஒன்றியச் செயலா் கதிா்வேல், ரியல் எஸ்டேட் அதிபா் ரவிமுருகையா ஆகியோா் மீது சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, முதல் 2 பேரைக் கைது செய்த நிலையில் மீதமுள்ள இருவரையும் கைது செய்யக் கோரி சிவகுமாா் உடலை வாங்க அவரது உறவினா்கள் மறுத்து வருகின்றனா்.
இந்நிலையில் போலீஸாரை கண்டித்தும், குற்றவாளிகளை உடனே கைது செய்யவும் கோரி ஆட்சியரகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து போலீஸாா், அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி அளித்த உறுதியின்பேரில் சிவகுமாா் உடலை வியாழக்கிழமை வாங்கிக் கொள்வதாகத் தெரிவித்து போராட்டத்தைக் கைவிட்டனா்.