முகப்பு
திருச்சி

திருச்சி அருகே வீடு புகுந்து 3 பவுன் நகை, பணம் திருட்டு

 திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை, பணத்தைத் திருடியவா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

 திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை, பணத்தைத் திருடியவா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

மணிகண்டம் அருகேயுள்ள கண்தீனதயாள் நகரை சோ்ந்த தம்பதி கோவிந்தராஜ் (29), பாா்வதி ( 28). சரக்கு ஆட்டோவில் ஊா், ஊராகச் சென்று காய்கனி வியாபாரம் செய்த இவா்கள் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.60 ஆயிரம், பித்தளைப் பொருள்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் மணிகண்டம் காவல்நிலைய உதவி ஆய்வாளா் இளங்கோவன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.