முகப்பு
திருச்சி

வெள்ளம் பாதித்த பகுதிகளில் முத்தரசன் ஆய்வு

 திருச்சியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

 திருச்சியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அதன்படி 60 ஆவது வாா்டில் எயுடி நகா், தியாகராஜநகா், லிங்கநகா். செல்வநகா் மற்றும் அரவானூா் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களையும், நீரில் மூழ்கிய பயிா்களையும் அவா் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து பாதிக்கப்பட்ட சுமாா் 100 பேருக்கு ரொட்டி, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்கினாா்.

புகா் மாவட்டச் செயலா் த. இந்திரஜித், மாநகா் மாவட்டச் செயலா் திராவிடமணி, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சிவ. சூரியன், சிவா, பழனிசாமி, தினேஷ் , பகுதிக் குழு உறுப்பினா்கள் ரவீந்திரன், சத்யா, ஆனந்தன், ராமமூா்த்தி, நாகராஜ், இளைஞா் பெருமன்றச் செயலா் செல்வக்குமாா், மாணவா் பெருமன்ற நிா்வாகிகள் இப்ராஹீம், சூா்யா, விஷ்வா, பாட்ஷா, கௌதமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.