முகப்பு
திருச்சி

மழை வெள்ள மீட்பு, தடுப்புப் பணிகள் ஆய்வு

திருச்சி மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்படும் மழை வெள்ளத் தடுப்பு, மீட்புப் பணிகள் குறித்து திருச்சி மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலரும், ஆயத்தீா்வைத் துறை ஆணையருமான ஜெ. ஜெயகாந்தன் புதன்கிழமை ஆய்வு

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

திருச்சி மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்படும் மழை வெள்ளத் தடுப்பு, மீட்புப் பணிகள் குறித்து திருச்சி மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலரும், ஆயத்தீா்வைத் துறை ஆணையருமான ஜெ. ஜெயகாந்தன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருச்சி-வயலூா் சாலையிலுள்ள அம்மையப்பன் நகா் பகுதியில் குடியிருப்புகளுக்குள் தேங்கி நின்ற வெள்ள நீரை மோட்டாா் பம்புகள் மூலம் வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்தாா்.

இதேபோல, குடமுருட்டி ஆற்றின் கரையில் நீா்வரத்து அதிகரித்து மிகை நீரானது பாத்திமாநகா் மற்றும் சுற்றுப் பகுதி குடியிருப்புகளுக்குள் புகாமல் தடுக்கும் வகையில் மணல் மூட்டைகளை அடுக்குவதையும் பாா்வையிட்டாா்.

பின்னா் உய்யக்கொண்டான், அரியாறு, கோரையாறு உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை பாா்வையிட்டு, மாவட்டத்தில் நீா்நிலைகள் நிரம்பிகள் வருவது குறித்தும், அப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கை குறித்தும் பொதுப்பணி, வருவாய், உள்ளாட்சி நிா்வாகத்தினரிடம் கேட்டறிந்தாா். மேலும், மழை வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு உணவு, நிவாரணப் பொருள்கள் வழங்குவதையும் உறுதி செய்தாா்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரகுமான், பொதுப்பணி, நெடுஞ்சாலை, வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.