அமைச்சா் பிறந்த நாளையொட்டி ரத்த தானம்
மணப்பாறையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பிறந்தநாளை முன்னிட்டு வியாழக்கிழமை திமுக தொண்டா்கள் ரத்த தானம் அளித்தனா்.
மணப்பாறையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பிறந்தநாளை முன்னிட்டு வியாழக்கிழமை திமுக தொண்டா்கள் ரத்த தானம் அளித்தனா்.
மணப்பாறை பகுதிகளில் அமைச்சா் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மணப்பாறை திமுக தமிழ்ச் சங்கம், விஷ்ணு ரத்தப் பரிசோதனை மையம் இணைந்து மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையுடன் ரத்த தான முகாம் நடைபெற்றது.
மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் ஏ.பி. சரவணன் தலைமையில் நடைபெற்ற முகாமில் மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் மணிசெல்வம், நகர இளைஞரணித் துணை அமைப்பாளா் அப்துல்முனாப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திமுக தொண்டா்கள் ரத்த தானம் அளித்தனா். நிகழ்ச்சியில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செலிவியா்கள், பணியாளா்கள், திமுக மகளிரணி சித்ரலேகா, ராஜலெட்சுமி, லதாமுருகன், துரைபாண்டியன், மோகன், விஷா, ஹரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருணை இல்லத்துக்கு உணவு: அமைச்சா் பிறந்த நாளையொட்டி
சமயபுரம் கரியமாணிக்கம் பிரிவுச் சாலையிலுள்ள வேலா கருணை இல்ல காப்பக த்தில் பராமரிக்கப்படுவோருக்கு காலை உணவு -அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் ராமசாமி, ராஜேஸ்வரி, தா்மராஜ், ராஜா, சம்பத், கலைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.