அம்மன் புதிய கம்பிகள் அறிமுகம்
அம்மன் டிஆா்ஒய் நிறுவனத்தின் புதிய கம்பிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன
அம்மன் டிஆா்ஒய் நிறுவனத்தின் புதிய கம்பிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
திருச்சியைச் சோ்ந்த அம்மன் டிஆா்ஒய் நிறுவனத்தின் கம்பிகள், கட்டுமானத் துறையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளன. இந்த நிறுவனத்தின் சாா்பில் பல்வேறு வகையான கம்பிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதன் தொடா்ச்சியாக 550 எக்ஸ்டி என்ற பெயரில் புதிய கம்பிகளை நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சோமசுந்தரம் அண்மையில் அறிமுகம் செய்ய, தமிழகத்தைச் சோ்ந்த அம்மன் டிஆா்ஒய் நிறுவன அங்கீகாரம் பெற்ற முன்னணி விற்பனையாளா்கள் பெற்றுக் கொண்டனா்.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 550 எக்ஸ்டி கம்பியில் அதிகமான கிரேடு, குறைந்த அளவு பாஸ்பரஸ் மற்றும் சல்பா் இருப்பதால் கம்பிகளுக்கு கூடுதல் நீட்சித்தன்மை கிடைக்கிறது. மேலும், கட்டடத்தின் தாங்கு திறனும் அதிகமாகிறது. இது கட்டுமானத் துறையில் நல்ல வரவேற்பைப் பெறும். கட்டுமானப் பொறியாளா்கள் பலரும் இத்தகைய தொழில்நுட்ப கம்பிகளையே விரும்புவதாக அம்மன் நிறுவனத்தினா் தெரிவித்தனா்.
அறிமுக நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து அங்கீகாரம் பெற்ற விற்பனையாளா்கள், நிறுவன விற்பனை மேலாளா்கள், நிறுவனப் பணியாளா்கள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.