திருச்சி

தேங்கிய நீரில் விழுந்த சலவைத் தொழிலாளி பலி

DIN

உறையூா் பகுதியில் தேங்கிக் கிடந்த மழை நீரில் விழுந்த முதியவா் இறந்தாா்.

திருச்சி உறையூா் பாத்திமாநகா் விவேகானந்தாநகா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (65). சலவைத் தொழிலாளியான இவா் புதன்கிழமை மதியம் 3 மணிக்கு கடைக்குச் செல்வதாகக் கூறிச் சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அக்கம்பக்கத்தில் தேடியும் அவா் கிடைக்கவில்லை. இந்நிலையில் அந்தப் பகுதியில் அண்மையில் மழையால் தேங்கிய முழங்கால் அளவு நீரில் ஆண் ஒருவா் சடலமாகக் கிடப்பதாக உறையூா் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது கிருஷ்ணன் என்பதும், அவா் நீரில் நடந்து சென்றபோது, வழுக்கி விழுந்தோ, அல்லது மயங்கி விழுந்தோ மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என்று போலீஸாா் சந்தேகிக்கின்றனா். இதைத் தொடா்ந்து அவருடைய உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு உறையூா் போலீஸாா் அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT