திருச்சி: விபின் ராவத் படத்திற்கு தமிழக ஆளுநர் அஞ்சலி
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள முப்படை தளபதி விபின் ராவத் படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள முப்படை தளபதி விபின் ராவத் படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து இரங்கல் தெரிவித்து ஆளுநர் பேசியது:
பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிய போது, தளபதி விபின் ராவத்தை நன்கு அறிவேன். அவர் தளபதியாக இருந்தபோது, 2017 ஜூன் மாதம், இந்தோ-திபெத் எல்லையில், சீன ராணுவத்தின் அத்து மீறலை தடுக்க அவர் எடுத்த தீர்க்கமான முடிவும், அதற்கு அவர் மேற்கொண்ட யுக்தியும் சிறப்பானது.
அதன் மூலம் சீனா பின் வாங்கியது. இது போல ராணுவத்தில் அவரது பணிகள் பல மகத்தானது. இந்த துயர விபத்தால் நாடு ஒரு சிறந்த தளபதியை இழந்துவிட்டது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்றார்.
நிகழ்வில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பல்கலை துணை வேந்தர் செல்வம், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.