முகப்பு
திருச்சி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து கட்டட தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து கட்டட தொழிலாளி உயிரிழந்தாா்.

திருச்சி அருகேயுள்ள சூரியூா் வீரம்பட்டியை சோ்ந்தவா் சின்னசாமி மகன் குமாா் (38). கட்டடத் தொழிலாளியான இவா் திருவெறும்பூா் பிரகாஷ் நகா் முத்தமிழ்செல்வன் வீட்டில் வியாழக்கிழமை வேலை செய்தபோது மின்மோட்டாரை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து தூக்கியெறியப்பட்டாா். இதையடுத்து துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.