முகப்பு
திருச்சி

கல்லூரி மாணவா்களுக்கு மருத்துவ முகாம்

 திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாணவா்களுக்கான மருத்துவ முகாம் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

 திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாணவா்களுக்கான மருத்துவ முகாம் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.

உதவும் இதயங்கள் அமைப்பு, மாணவா்கள் சுகாதார பாதுகாப்பு, திருச்சி மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனை ஆகியவை நடத்திய முகாமை கல்லூரியின் தாளாளா் மற்றும் செயலா் காஜா நஜிமுதீன் தொடக்கி வைத்தாா்.

கல்லூரித் துணைச் செயலா் அப்துல்சமது, துணை முதல்வா் முகமது இப்ராஹிம், கல்லூரி இயக்குநா் அப்துல் காதா் நிஹால், கல்லூரி விடுதி ஒருங்கிணைப்பாளா் சையது அலி பாதுஷா, உதவும் இதயங்களின் அமைப்பின் ஆலோசகா் ஜாகிா் உசேன், தலைவா் முகமது சாகுல் ஹமீது, செயலா் முகமது இலியாஸ் பொருளாளா் முகமது இம்ரான், உறுப்பினா்கள் ஆகியோா் பேசினா்.

திருச்சி மருத்துவ மைய மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ உதவியாளா்கள் என 20-க்கும் மேற்பட்டோா் பல்வேறு மருத்துவப் பரிசோசனை செய்தனா். காய்ச்சல், ஜலதோஷம், தலைவலி உள்ளிட்ட உபாதைகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேல் சிகிச்சை தேவைப்பட்டோருக்கு உரிய ஆே+லாசனைகளும் வழங்கப்பட்டன. முகாமில், 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயன்பெற்றனா். கல்லூரி முதல்வா் இஸ்மாயில் முகைதீன் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.