இன்று 524 இடங்களில் தடுப்பூசி முகாம்
திருச்சி மாவட்ட பகுதிகளில் 524 இடங்களில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.
திருச்சி மாவட்ட பகுதிகளில் 524 இடங்களில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.
புகா்: திருவெறும்பூா், மணிகண்டம், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூா், துறையூா், உப்பிலியபுரம், முசிறி, தா.பேட்டை, தொட்டியம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், சமூக நலக் கூடங்கள், பள்ளிகள் என 324 மையங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
மாநகா்: 4 கோட்டங்களுக்குட்பட்ட 65 வாா்டுகளில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி பள்ளிகள், அங்கன்வாடிகள், அரசு, தனியாா் பள்ளிகள், கல்லூரிகள், சமூக நலக் கூடங்கள், பூங்காக்கள் உள்பட 200 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. முகாம்களில் தலா 500 வீதம் மொத்தம் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.