திருச்சி

துறையூர் அருகே வீட்டில் கொள்ளை முயற்சி

DIN

துறையூர் அருகே திண்ணனூரில் நள்ளிரவில் தம்பதியரின் படுக்கையறையின் கதவை மர்மநபர்கள் வெளிப்புறமாக நெம்பி திறக்க முயன்றதால் பதட்டமான அவர்கள் உதவிக்கு அருகிலிருந்த உறவினரை அழைத்தனர்.

திருச்சி மாவட்டம், புலிவலம் காவல் சரகத்துக்குள்பட்ட திண்ணனூரில் தே.மகாலிங்கத்துக்கு சொந்தமானவீட்டில் வசிப்பவர் த. அரவிந்த்குமார்(23). தந்தையுடன் சேர்ந்து கேட்டரிங் வேலை செய்கிறார். டிச. 18 இரவு வீட்டின் புறக்கதவு மற்றும் படுக்கையறைக் கதவை உள்தாழிட்டு விட்டு அரவிந்த் தன் மனைவி தேவியுடன் உறங்கினார்.

நள்ளிரவு 1.30 மணியளவில் படுக்கையறைக் கதவை வெளியே இருந்து யரோ நெம்புவதாக உணர்ந்த அரவிந்த் பதட்டமடைந்து அதே ஊரில் வசிக்கும் தன் சித்தப்பா யோகேஸ்வரன் செல்லிடப்பேசியில் அழைத்து நடந்ததை கூறி உதவி கேட்டார். உடனே யோகேஸ்வரன் அங்கே சென்று எதிரே தென்பட்ட நபரை அடையாளம் தெரியாமல் அரவிந்தா யாரையும் காணாமே என்று கேட்டுள்ளார்.

அப்போது அந்த நபரும், வீட்டிலிருந்து இருவரும், மரத்தின் பின்னால் பதுங்கியிருந்த இருவரும் தங்கள் கைகளில் வைத்திருந்த கட்டையைக் காட்டி தகாத வார்த்தைகளால் திட்டி கல்லை எடுத்து வீசி விட்டு தப்பியோடினர். இந்த தாக்குதலில் யோகேஸ்வரன் காயமடைந்தார். தப்பியோடிய 5 பேரும் கறுப்பு டி சர்ட், சார்ட்ஸ்(டிரவுசர்) அணிந்து கொண்டு தலை, முகம் ஆகியவற்றை மறைத்து முண்டாசு கட்டியிருந்தனராம். 

அரவிந்த் வீடு உள்பட மேலும் நான்கு வீடுகளிலும் மர்மநபர்கள் வீட்டை திறந்து திருட முயற்சித்துள்ளனர். இது தொடர்பாக புலிவலம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT