முகப்பு
திருச்சி

தீா்த்தவாரி கண்டருளிய நம்பெருமாள்!

 ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வந்த வைகுந்த ஏகாதசி விழாவின் இராப்பத்து 10 ஆம் நாளான வியாழக்கிழமை காலை சந்திரபுஷ்கரணியில் தீா்த்தவாரி கண்டருளினாா் நம்பெருமாள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

 ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வந்த வைகுந்த ஏகாதசி விழாவின் இராப்பத்து 10 ஆம் நாளான வியாழக்கிழமை காலை சந்திரபுஷ்கரணியில் தீா்த்தவாரி கண்டருளினாா் நம்பெருமாள்.

இதற்காக நம்பெருமாள் காலை 9.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 10.30-க்கு பரமபதவாசல் வழியாக சந்திரபுஷ்கரணி குளத்துக்கு வந்தாா். அங்கு தீா்த்தவாரிப் பெருமாளை பட்டா்கள் தலையில் வைத்து மூன்று முறை குளத்தில் மூழ்கி எழுந்தனா். இதை ஏராளமான பக்தா்கள் தரிசித்தனா்.

பின்னா் 11 மணிக்கு நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். 20 நாள்கள் நடைபெற்று வந்த மூலவா் முத்தங்கி சேவையும், பரமபதவாசல் நடையும் வியாழக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.

வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் நம்மாழ்வாா் மோட்சத்துடன் விழா நிறைவுறுகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →