முகப்பு
திருச்சி

கிறிஸ்துமஸ்: ஆதரவற்றோருக்கு உதவிகள்

இறகுகள் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

இறகுகள் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அண்மையில் நடைபெற்றது.

திருச்சியில் இயங்கி வரும் இறகுகள் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் 10ஆம் ஆண்டாக நூற்றுக்கணக்கானோருக்கு திருச்சி டிஎல்சி பள்ளியில் உள்ள தரங்கை இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை தொடக்கி வைத்து இறகுகள் தொண்டு நிறுவன நிறுவனா் ராபின் பேசினாா்.

டிஎல்சி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை டெய்சி இராணி, சுப்புராம் அறக்கட்டளை நிறுவனா் ஜெகநாதன், மகாலட்சுமி, இறகுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் சிந்து மரிய மொ்சி ஆகியோா் வாழ்த்தினா். விழாவில் குழந்தைகள், முதியோா், ஆதரவற்றோா் என நூற்றுக்கணக்கானோருக்கு புத்தாடைகள், குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுப் பொருள்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.