முகப்பு
தமிழ்நாடு

ஈரான் போர் எதிரொலியா? முட்டை விலை கடும் வீழ்ச்சி!

ஈரான் போர் எதிரொலியால் முட்டை விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

Updated On : 26 மார்ச், 2026 at 12:53 PM
முட்டை ஏற்றுமதி - பிரதிப் படம்
பகிர்:

அசைவப் பிரியர்களின் முதல் தேர்வாக எப்போதுமே இருக்கும் முட்டை விலை சில்லறை விற்பனையில் கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே ரூ.5-க்கு மேல் இருந்து வந்த நிலையில், தற்போது மெல்ல குறைந்து வருகிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பண்ணையாளா்களிடம் முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக கருத்து கேட்கப்பட்டது. அதில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை ரூ.3.45 காசுகளாக நிா்ணயித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்தது.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக முட்டை விலை நாள்தோறும் சரிவைக் கண்டு வருகிறது. இதற்குக் காரணம் ஈரான் போர் எதிரொலி என்றே கூறப்படுகிறது.

ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உலக நாடுகளுக்கு எரிபொருள்கள், கச்சா எண்ணெய் சென்றடைவதில் சிக்கல் நிலவுகிறது.

எரிபொருள் தட்டுப்பாட்டால், வணிக சிலிண்டர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்தது. இதனால், வணிக சிலிண்டர்கள் கிடைக்காமல், பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலும் பெரிய உணவக நிறுவனங்கள் எப்படியோ மின் அடுப்புகள், விறகு அடுப்பு என நிலைமை சமாளித்தாலும், சிறிய உணவகங்கள், மாற்று வழிகளுக்கு இடமில்லாத நிலையில், கடைகளை மூடிவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாள்தோறும் நூற்றுக்கணக்கானோரின் உணவுத் தேவையை பூர்த்தி செய்துவந்த தெருவோர உணவகங்கள் சிலிண்டர்கள் கிடைக்காமல் நாள் கணக்கில் மூடப்பட்டுள்ளது. பொதுவாகவே தெருவுக்கு ஒரு நான்கு உணவகங்கள் இருந்தால், அதில் பெரும்பாலானவை அசைவ உணவகங்களாகத்தான் இருக்கும். இவை பல நாள்களாக மூடப்பட்டிருப்பதால் முட்டைகள் கொள்முதல் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.