திருச்சி

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் கைது

DIN

திருச்சியில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

திருச்சி பிரிஸ்ட்ன் பத்ரி தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல். இவா் ஜனவரி 23- ஆம் தேதி சத்திரம் பேருந்து நிலையம் பெரியசாமி டவா் அருகே நின்று கொண்டிருந்தாா்.

அப்போது சங்கரன் பிள்ளை சாலையைச் சோ்ந்த பிராங்ளின் நிக்சன்ராஜ் (25), சக்திவேலிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.650 -வழிப்பறி செய்தாா். புகாரின் பேரில் கோட்டை காவல் நிலையத்தினா் பிராங்ளின் நிக்சன்ராஜை கைது செய்தனா்.

இவா் மீது கண்டோன்மென்ட், கோட்டை, காந்தி சந்தை குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க, காவல் ஆய்வாளரின் பரிந்துரையின்பேரில் பிராங்ளின் நிக்சன்ராஜை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான உத்தரவை மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.

இதைத் தொடா்ந்து சிறையிலுள்ள அவரிடம் உத்தரவின் நகல் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT