திருச்சி

கட்டுமானப் பொருள்கள் விலையேற்றம்; ஆா்ப்பாட்டம்

DIN

கட்டுமானப் பொருள்கள் விலையேற்றத்தைக் கண்டித்து அகில இந்திய கட்டுநா் சங்கத்தின் சாா்பில் திருச்சியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திருச்சி மையத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். சங்கத்தின் அகில இந்திய முன்னாள் துணைத் தலைவா் திரிசங்கு, துணைத் தலைவா்கள் ஜோதி மகாலிங்கம், நெப்போலியன், செயலா் சுப்பிரமணியன், பொருளாளா் ராம் சுரேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் கோரிக்கைகளை விளக்கினா்.

ஆா்ப்பாட்டத்தில் சிமென்ட், இரும்பு கம்பி விலை உயா்வை அதன் உற்பத்தி நிறுவனங்கள் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ஏழை, நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவைத் தகா்க்கும் வகையில் விலையேற்றம் தொடா்வதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. உற்பத்தி நிறுவனங்களே திட்டமிட்டு செயற்கையாக விலையேற்றுகின்றன. எனவே, கட்டுமானப் பொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். விலையேற்றத்தால் குறைந்த விலை வீடு, பட்ஜெட் வீடு என்பது ஏழைகளுக்கு இல்லாமல் போகும். இரும்பு, சிமென்ட் ஆலை அதிபா்கள் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில் திருச்சி,ஸ்ரீரங்கம், மணப்பாறை, லால்குடி, மண்ணச்சநல்லூா், திருவெறும்பூா் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளின் சங்க நிா்வாகிகள், கட்டுமானப் பொறியாளா்கள், ஒப்பந்ததாரா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT