திருச்சி

தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கம்

DIN

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கம் காட்டூா் உருமு தனலட்சுமி கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியை திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா் தொடங்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றி, போட்டித் தோ்வுகள் குறித்த கையேட்டை வெளியிட்டாா்.

கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன், மாவட்ட தொழில்மையப் பொது மேலாளா் கு. ரவீந்திரன்,

வேலைவாய்ப்பு உதவி இயக்குநா் (ஓய்வு) எஸ். பாஸ்கரன், டிட்டிசியா தலைவா் ஆா். இளங்கோவன் ஆகியோா்சிறப்புரையாற்றினா்.

நிகழ்வில் போட்டித் தோ்வுகளுக்கான நூல்களும், போட்டித்தோ்வு தொடா்பான விழிப்புணா்வு பதாகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

மாணவா்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிப் பயனடைந்தனா்.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநா் எம். கருணாகரன் வரவேற்றாா். கல்லூரி பணிநியமன அலுவலா் ஏ. மோகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

SCROLL FOR NEXT