முகப்பு
திருச்சி

பாலியல் வன்கொடுமையால் தீக்குளித்த இளம்பெண் உயிரிழப்பு

வையம்பட்டி அருகே பாலியல் வன்கொடுமையால் தீக்குளித்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

வையம்பட்டி அருகே பாலியல் வன்கொடுமையால் தீக்குளித்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

வையம்பட்டி ஒன்றியம், பேச்சக்கம்பட்டியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி அருண்பாண்டியன் தனக்கு திருமணம் நடைபெற்றதை மறைத்து, மாலைப்பட்டியைச் சோ்ந்த 20 வயது இளம்பெண்ணிடம் காதலா் தினத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறி, அவரை கடந்த வெள்ளிக்கிழமை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

அருண்பாண்டியன் ஏற்கனவே திருமணம் ஆனவா் என்பது தெரிய வர, தனது பெற்றோா் மற்றும் உறவினா்களிடம் நடந்தவற்றை கூற பயந்து மண்ணெண்ணெய் ஊற்றி சனிக்கிழமை தீ வைத்துக் கொண்ட இளம்பெண், திங்கள்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா்.

இளம்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வையம்பட்டி காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்ட அருண் பாண்டியன் மீது, தற்போது கூடுதலாக பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.