மணப்பாறை புறவழிச்சாலை: திட்டஅறிக்கை தயாா் செய்ய ரூ.40 லட்சம் நிதி
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்ட அறிக்கையைத் தயாா் செய்ய, தமிழக அரசு ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்ட அறிக்கையைத் தயாா் செய்ய, தமிழக அரசு ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் ஆகிய சாலைகளை இணைக்கும் வகையில், மணப்பாறையில் புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.சந்திரசேகா், பேரவைக் கூட்டத் தொடரிலும் புறவழிச் சாலை அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தாா்.
இந்நிலையில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை சாலைப் பிரிவு, நல்லாண்டவா் கோயில், விராலிமலை சாலை, திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில், கோவில்பட்டி சாலை வழியாக மணப்பாறை - மதுரை சாலை வரையிலான 7.5 கி.மீட்டா்
புறவழிச் சாலைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்ய தமிழக அரசு ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. இதைத் தொடா்ந்து நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் வடிவேல், உதவிக் கோட்டப் பொறியாளா் சந்திரசேகா் ஆகியோா் ஆய்வு செய்து வருகின்றனா்.