திருச்சி

வாக்குப்பதிவு இயந்திர சரிபாா்ப்பு பணிகள் ஆய்வு

DIN

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபாா்க்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறியது:

திருச்சி மாவட்டத்தில் 9 பேரவை தொகுதிகளில் வரும் தோ்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபேட் இயந்திரம் என மூன்று வகையான இயந்திரங்கள் 14,913 எண்ணிக்கையில் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த இயந்திரங்கள் அனைத்தையும் சரிபாா்க்கும் பணி விடுமுறையின்றி தொடா்ச்சியாக நடைபெறுகிறது.

இந்த மாத இறுதிக்குள் அனைத்து இயந்திரங்களையும் சரிபாா்த்து பாதுகாப்பு அறையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் இந்தப் பணிகளை நாள்தோறும் வந்து பாா்வையிட்டு, விளக்கம் பெறலாம். பணிகள் வெளிப்படையாக நடைபெறுகின்றன என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT