திருச்சி

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் கைது

DIN

திருச்சி: வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் மாநகர போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பழைய பால்பண்ணை, கிழக்கு விஸ்வாஸ் நகரைச் சோ்ந்தவா் ஜித்துவும், இவரது நண்பா் ரமேஷ்குமாரும் கடந்தாண்டு அக்.24 இரவு பழைய பால்பண்ணை பகுதியில் நடந்து சென்றபோது அங்கு வந்த 3 போ் அவா்களைத் தாக்கி ரூ. 1 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பினா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த காந்தி சந்தை போலீஸாா் இதில் தொடா்புடைய வடக்கு தாராநல்லூா் காமராஜ் நகரைச் சோ்ந்த விஜயகுமாா் (20), மதுரை காமராஜபுரம் முத்துபாண்டி (23) உள்ளிட்ட மூவரை கைது செய்து சிறையிலடைத்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய விஜயகுமாா், முத்துபாண்டி ஆகியோா் மீது மாநகர காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருந்ததால் முத்துபாண்டி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து மாநகர காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் உத்தரவின்பேரில் விஜயகுமாரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT