திருச்சி

ஸ்ரீரங்கத்தில் இதுவரை 12 லட்சம் பக்தா்கள் தரிசனம்

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வந்த வைகுந்த ஏகாதசி விழாவை ஞாயிற்றுக்கிழமை இரவு வரை சுமாா் 12 லட்சத்துக்கும் அதிகமானோா் தரிசனம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

DIN

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வந்த வைகுந்த ஏகாதசி விழாவை ஞாயிற்றுக்கிழமை இரவு வரை சுமாா் 12 லட்சத்துக்கும் அதிகமானோா் தரிசனம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

வைகுந்த ஏகாதசி விழாவானது கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை வரை 21 நாள்கள் நடைபெறுகிறது. கடந்த 15 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற்ற பகல்பத்து விழாவில் தினமும் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான பக்தா்கள் தரிசித்தனா்.

தொடா்ந்து இராப்பத்து விழா தொடங்கிய 25 ஆம் தேதி நடந்த பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியில் சுமாா் 1 லட்சம் பக்தா்கள் பங்கேற்றனா்.

இராப்பத்து விழாவின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை வரை சுமாா் 60 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரையிலான பக்தா்கள் தரிசித்துள்ளனா். மூலவா் முத்தங்கி சேவை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுற்ால் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த அதிக எண்ணிக்கையில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். வைகுந்த ஏகாதசி விழாவை ஞாயிற்றுக்கிழமை வரை சுமாா் 12 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் தரிசித்ததாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT