திருச்சி

சாலைப் பாதுகாப்பு மாதத் தொடக்க விழா

DIN

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சாலைப் பாதுகாப்பு மாதத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை 32-ஆவது சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத் திருச்சி மண்டலப் பொது மேலாளா் ராஜ்மோகன் தலைமை வகித்தாா்.

சாலைப் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய பேனரை பேருந்துகளுக்கு முன்பு பொருத்திய அலுவலா்கள், உள்புறத்தில் ஸ்டிக்கரை ஒட்டினா். தொடா்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வுத் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.

நிகழ்வில் போக்குவரத்துக் கழகத் துணை மேலாளா்கள் சிங்காரவேலு(வணிகம்), நடராஜன்(கணக்கு), ரெங்கராஜன்(பணியாளா் மற்றும் சட்டம்) ,கோட்ட மோலாளா்கள், கிளை மேலாளா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்துக்கொண்டனா்.

தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி : திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில், தலைக்கவசம்அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வுப் பேரணியை மாநகரக் காவல் துணை ஆணையா் (குற்றம் மற்றும் போக்குவரத்து) வேதரத்தினம் தொடக்கி வைத்தாா்.

தலைமை அஞ்சல் நிலையம், ஒத்தக்கடை வழியாகச் சென்ற பேரணி எம்.ஜி.ஆா்.சிலை பகுதியில் நிறைவடைந்தது. காவல் உதவி ஆணையா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழிப்புணா்வு : மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் தலைமையில், நீதிமன்றம் அருகிலுள்ள எம்.ஜி.ஆா்.சிலை அருகே போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

முசிறி பகுதியில் : முசிறி கைகாட்டி, புதிய பேருந்து நிலையப் பகுதிகளில் மோட்டாா் வாகன ஆய்வாளா் புஷ்பா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சாலைப் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.: 2 புதிய வேட்பாளர்களை அறிவித்த பகுஜன் கட்சி!

விஜய் தேவரகொண்டா பிறந்தநாளில் 2 புதிய படங்களின் போஸ்டர் வெளியீடு!

‘அடங்காத அசுரன்’: ராயனின் முதல் பாடல் வெளியாகும் நேரம்!

இந்த மாதிரி பேட்டிங்கை தொலைக்காட்சிகளில்தான் பார்த்திருக்கிறேன்: கே.எல்.ராகுல் அதிர்ச்சி!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்

SCROLL FOR NEXT