முகப்பு
திருச்சி

செல்லிடப்பேசிகளை பறித்த இருவா் கைது

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் செல்லிடப்பேசிகளை பறித்துச் சென்ற புகாரில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் செல்லிடப்பேசிகளை பறித்துச் சென்ற புகாரில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

டிவிஎஸ் டோல்கேட் இணைப்புச் சாலையிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே புதுக்கோட்டை பெரியாா்நகா் சுந்தரம் (23), இவரது நண்பா் முஜீபுா் ரகுமான் சனிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த மா்ம நபா்கள், இருவரிடமிருந்த செல்லிடப்பேசிகளை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, துரைசாமிபுரத்தைச் சோ்ந்த முனீசுவரன், ஆறுமுகம் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.